சென்னை அரசு பள்ளியில் படித்த மாணவி.. இலவசமாக சீட் கொடுத்த தனியார் கல்லூரி.. "தலைநகரில் சாதித்த ஏழை தந்தையின் மகள்"
சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் என்பவரின் மகள் பூங்கோதை, சென்னை மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 பயின்று, பொதுத்தேர்வில் 578 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இந்நிலையில், மாணவி பூங்கோதை பயில விரும்பிய பி.காம் வணிகவியல் மேலாண்மை பிரிவில், அவருக்கு முழு கல்வி உதவித்தொகையுடன் சீட் வழங்குவதாக, எத்திராஜ் மகளிர் கல்லூரியின் சேர்மன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய மாணவி பூங்கோதை, மிகப்பெரும் கல்லூரியில் தனக்கு சீட் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.