அடுத்தடுத்து மயங்கி விழுந்த தொழிலாளர்கள்... போராட்டத்தில் அதிர்ச்சி... மதுராந்தகத்தில் பரபரப்பு

Update: 2024-08-09 14:53 GMT
  • whatsapp icon

தனியார் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என கூறி தொழிற்சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போரட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று தொழிற்சாலைக்கு வந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்காததால், அவர்கள் வெளியே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெண் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தி கொண்டனர்....

Tags:    

மேலும் செய்திகள்