"பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது"கூட்டமாக வாசலில் நின்ற பெற்றோர்கள் - ஓடி வந்த ஆசிரியர்கள்..

Update: 2023-11-01 07:36 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் வகுப்பறை கட்டிடம் கட்டி தர கோரி, பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வகுப்புகளுக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் ஐந்தாம் வகுப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், எனவே, வகுப்பறை கட்டடம் கேட்டு, பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்