கேக்கில் பிரிண்ட் ஆன செய்தித்தாள்.. கடுப்பான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

Update: 2024-08-03 01:58 GMT

திருநள்ளாறு தாமனங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கடை ஊழியர்களிடம் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத்துறையினர் பேக்கரியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கேக் செய்யும் இடம் குப்பை கூடாரமாக இருப்பதைக் கண்டு கோவம் அடைந்த அதிகாரி, நான் வந்து சுத்தம் செய்து கொடுக்கட்டுமா? என்று கோவத்துடன் கேட்டார். செய்தித்தாள்கள் பயன்படுத்தி கேக் தயாரிக்கப்பட்டது கண்டுபிடித்து, அவற்றை அப்புறப்படுத்தியதோடு, பிரட் உள்ளிட்டவற்றையும் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும், பேக்கரியின் கிச்சனுக்கு சீல் வைத்து, 5 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்