#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு - "உத்தரவை உடனே வாபஸ் வாங்குக.." - ஐகோர்ட் அதிரடி

Update: 2023-09-04 06:52 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி மத்திய அரசால் முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்

எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவித்த அரசாணை மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல - உயர் நீதிமன்றம்

சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்

வழக்கை மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி மனு மீது நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அமர்வு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்