நேக்காக பால் பாக்கெட்டுகளை திருடிய சிறுவன் - காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்
கடலூரில் ஆவின் பால் பாக்கெட்டுகளை திருடி விற்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். அங்கு, கடந்த சில நாட்களாக, ஆவின் பால் பூத்களில் இருந்து பால் பாக்கெட்டுகள் திருடப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது தொடர்பாக அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார், மஞ்சக்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் இந்த திருட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 30 ரூபாய் பால் பாக்கெட்டுகளை அவன் 10 ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது