டூவீலர் ஓட்டும் மாணவர்கள் கவனத்திற்கு...! - உயர்நீதிமன்றம் அறிவுரை

Update: 2023-08-08 11:20 GMT

உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை தங்கள் குழந்தைகள் ஓட்டுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. விருதுநகரை சேர்ந்த மாணவர் முத்துமணி, லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். சுமார் 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம், உயர்நீதிமன்ற மதுரைக்​கிளையில் ​மேல்முறையீடு செய்தது. விபத்தில் இறந்தவரிடம் லைசென்ஸ் இல்லை என்றும், லாரி ஓட்டுநர் மட்டுமே காரணமல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார். இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்து, அதில் 50 சதவீதத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிட்டார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் லைசென்ஸ் இன்றி டூவீலரில் செல்ல அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்