இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது எனக் கூறியுள்ளார்.சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா எனக் கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.