ரூ.9,000 சம்பளம் வாங்கும் தூய்மை பணியாளருக்கு ரூ.2.35 கோடியா? - "ஒன்னுமே புரியலயே’’ மன உளைச்சலில் குமுறும் மகன்

Update: 2024-10-22 03:00 GMT

ஆம்பூரில் தூய்மை பணி செய்யும் மூதாட்டி இரண்டு கோடியே 35 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை இருப்பதாக நோட்டீஸ் வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணி, தனியார் தோல் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில், அவருக்கு சொந்தமாக திருச்சியில் நிறுவனம் செயல்படுவதாகவும், அதன் பெயரில் 2 கோடியே 39 லட்சம் ரூபாய் வரி பாக்கி உள்ளதாகவும், கடிதம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி, தனது மகனிடம் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் ஜிஎஸ்டி அலுவலகத்தில் முறையிட கூறியுள்ளனர். இந்த சூழலில், காவல் நிலையம் மற்றும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் முறையிட்டுள்ளதாகவும், இந்த நோட்டீஸால் மன உளைச்சலில் தவிப்பதாகவும், ராணி மற்றும் அவரது மகன் சங்கர் குமுறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்