"அனைவரும் பாரத நாட்டின் ஒரு குடும்ப உறுப்பினர்கள்" - ஆர்.என். ரவி பேச்சு

Update: 2023-11-09 13:56 GMT

"அனைவரும் பாரத நாட்டின் ஒரு குடும்ப உறுப்பினர்கள்" - ஆர்.என். ரவி பேச்சு

அனைவரும் பாரதம் என்ற ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற அளவில், உறவுகள் பேணப்பட வேண்டும் என்று ஆளுநர் ரவி வலியுறுத்தியுள்ளார்.உத்தரகாண்ட் மாநிலம் உருவான தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த, சென்னையில் வசிக்கும்

பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டரை கவுரவித்தார். பின்னர் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி கர்நாடகாவுடன் காவிரி நீர் பிரச்னை நீடித்து வருவதாகவும், பாரத நாடு ஒரு குடும்பமாக இருந்தபோது பிரச்னை இல்லை என்றும் கூறினார். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு பின்பு இதுபோன்ற பிரச்னைகள்

ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் பல மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும், நாம் அனைவரும் பாரதம் என்ற நாட்டின் , ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை உணர வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்