துரோகம் செய்த கணவனை ஆள் வைத்து வெளுத்த மனையாள் - தர்மபுரியில் பகீர் சம்பவம்

Update: 2023-11-03 14:23 GMT

தருமபுரி அருகே, திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெறாத பெண்ணை ரகசியமாய் திருமணம் செய்த விவகாரத்தில், பா.ஜ.க. நிர்வாகி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.தருமபுரி அருகே ஒட்டப்பட்டி என்ற இடத்தில் வசிக்கும் சிவசக்தி, பா.ஜ.க தருமபுரி மாவட்ட துணைத் தலைவராகவும், ஜருகு ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். சிவசக்திக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ள நிலையில், காவேரிப்பட்டினம் அருகே வடிவேல் என்பவரது மகள் தமிழரசியை சமீபத்தில் திருமணம் செய்து, ரகசியமாய் குடும்பம் நடத்தி வந்துள்ளார். தமிழரசிக்கு ஏற்கனவே திருமணமாகி கணேசன் என்ற கணவர் உள்ளார். இந்நிலையில், சிவசக்தி வீட்டிற்கு வந்த கணேசன், சட்டப்படி விவாகரத்து பெறாத நிலையில், எப்படி திருமணம் செய்ய முடியும் என கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவசக்தி, தனது அடியாட்களை வைத்து கணேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணேசன், அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், சிவசக்தி உட்பட ஆறு பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்