#Breaking||ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் திருப்பம்..ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Update: 2023-11-06 07:29 GMT

ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்களை ஒன்றாக இணைத்து நவம்பர் 10- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ரி. வில்சன் ஆஜராகி

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரும் ரிட் மனு நவம்பர் 10-ஆம் தேதி தற்காலிகமாக பட்டியலிடப்பட்டுள்ளது அதை நீக்க கூடாது என்றும், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைக்கும் வேந்தரான ஆளுநரின் அறிவிக்கைக்கு தடை கோரிய ரிட் மனுவை இணைத்து நவம்பர் 10ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்