படுத்து கிடந்தவரை பரலோகம் அனுப்பிய கும்பல்..காரணம் தெரியாமல் பிரிந்த உயிர்-இரவாக நடந்த பகீர் சம்பவம்

Update: 2023-08-22 14:03 GMT

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த மணிக்கு, 2 மனைவிகள் உள்ளனர். பிள்ளையார்குட்டை அருகே தனது மனைவிக்கு சொந்தமான இடத்தில் கடலை சாகுபடி செய்து, அங்கு 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை மணி வளர்த்து வந்துள்ளார். நேற்றிரவு வீட்டில் சாப்பிட்டு சென்ற மணி, வயலில் உள்ள கொட்டகையில் உறங்கியுள்ளார். காலையில் மணி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வெட்டுக் காயத்துடன் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இதே கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் உண்டியை மர்ம நபர்கள் நேற்றிரவு திருடிவிட்டு தப்பிச் சென்றபோது, அவர்களை ஆடுதிருட வந்தவர்கள் என நினைத்து மணி தடுத்திருக்கலாம் என்றும், இதன்காரணமாக வெட்டிக்கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மணியை டீசல் ஊற்றி எரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்