பாரத் பந்த் - தொழிலாளர் சட்டத்தை எதிர்ப்பது ஏன்?
நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கைகள் பற்றி தற்போது பார்ப்போம்...
பாரத் பந்த் - தொழிலாளர் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கைகள் பற்றி தற்போது பார்ப்போம்... தொழிலாளர் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் சட்டத்திருத்தத்தில், ஊழியர்கள் பணிநீக்கத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. தற்போது 100 ஊழியர்கள் கொண்ட நிறுவனங்கள் காரணமின்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், ஊழியர்கள் வரம்பை 300ஆக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்களில் அபாயகரமான இடங்களில் பணி செய்ய ஊழியர்களின் உச்சவரம்பை நீக்குவதற்கும், நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமைகள் கிடைக்க, குறைந்தபட்சம் 20 ஊழியர்களில் இருந்து 50ஆக உயர்த்துவதற்கும், மின் இயந்திரங்களின்றி இயங்கும் இடங்களை தொழிற்சாலை என வகைப்படுத்த குறைந்த ஊழியர் எண்ணிக்கை 40ஆக உயர்த்துவதற்கும் அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.