கஞ்சா சோதனையின்போது வெடித்த மர்ம பொருள் - காவலர்கள் உட்பட மூவர் படுகாயம்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மர்மபொருள் வெடித்ததில் காவலர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-28 07:19 GMT
அரக்கோணம் மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் சந்தோஷ், ஏழுமலை ஆகிய மூவரும் ரியாஸ் அஹமது என்பவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த ஒரு பையை காவலர்கள் எடுத்து சோதனை செய்த போது, மர்ம பொருள் ஒன்று மிகுந்த சத்தத்துடன் வெடித்தது. இதில், காவலர்கள் ஏழுமலை மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்