ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து கொள்ளை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தடப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் லாவண்யா ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர்கள் சிலர் அவருக்கு பணம் எடுக்க உதவ முயற்சிப்பது போல் நடித்து வங்கிக்கணக்கில் ரூபாய் 31 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.