சென்னையில் தேர்தல் பிரசாரம் - வெளியான முக்கிய விதிமுறைகள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் 136 இடங்களில் பிரசார கூட்டம் நடத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் 136 இடங்களில் பிரசார கூட்டம் நடத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 136 இடங்களில் திறந்த வெளி கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசார கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும்,உள் அரங்கமாக இருப்பின் 50 சதவீதம் பேருக்கும், திறந்தவெளியாக இருப்பின் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வீடு, வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், அதிகபட்சம் 20 பேருடன் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், மதம் மற்றும் சாதி சார்புடைய அடையாளங்களை பயன்படுத்தி பிரசாத்தில் ஈடுபட கூடாது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.