டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை
டெங்கு வைரஸ் காரணமாக 400க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றம்சாட்டு
டெங்கு வைரஸ் காரணமாக 400க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை பகுதிகளில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 400 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வடகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் போதிய அளவு படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பாதித்துள்ளனர். எனவே சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.