நேசமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு - ரூ.5 கோடி மதிப்பிலான ஆவணம் பறிமுதல்

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் மண்டல மேலாளர் நேசமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவடைந்தது.

Update: 2021-10-13 07:04 GMT
தமிழ்நாடு வனத் தோட்டக் கழக, விழுப்புரம் மண்டல மேலாளர் நேசமணி அலுவலகத்தில், நேற்று சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 36 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான ஆய்வாளர்கள் 12 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். இதில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பங்கு சந்தை முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டடதாக கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்