தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் - தமிழில் அர்ச்சனை திட்டம் தொடர்பாக மனுதாக்கல்

தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்ற திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

Update: 2021-09-21 12:17 GMT
தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அண்மையில் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையின் போது, எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்குட்பட்டது என்றும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என 2008ம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது என்றனர். மேலும் வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்