வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த கும்பல் - ரூ.4 லட்சம் பணம் கொள்ளை
ராணிப்பேட்டையில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் வைத்து உடைத்து 4 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
அரக்கோணம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்மை தனியார் நிறுவனம் பராமரித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை நிரப்பிச் சென்றதாக தெரிகிறது. இதனிடையே வெல்டிங் இயந்திரங்களின் உதவியோடு ஏடிஎம்மை துண்டு துண்டாக நொறுக்கி அதன் உள்ளே இருந்த பணத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் 4 லட்ச ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம்மை சுக்கு நூறாக நொறுக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....