4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - தனி வட்டாட்சியர் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த தனி வட்டாட்சியர் ராமநாதன் தலைமையிலான குழுவினர், ஒருவரை கைது செய்தனர்.

Update: 2021-09-07 07:27 GMT
ராஜபாளையத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனி வட்டாட்சியர் ராமநாதன் தலைமையிலான குழுவினர் தளவாய்புரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பரிசோதனை செய்ததில் அதில் 14 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனடியாக ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சித்தையாவை கைது செய்த அதிகாரிகள், லாரியை கைப்பற்றினர். அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்