"மின்சார பேருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை தண்டையார்பேட்டையில் புதிதாக 7 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ. எபினேசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2021-08-13 06:41 GMT
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தண்டையார்பேட்டை ஐஓசி-யில் முதல் வள்ளலார் நகர், உயர்நீதிமன்றம், மூலக்கடை, சுங்க சாவடி, மணலி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. பெரிய மற்றும் மினி பேருந்துகள் இயக்கம் தொடங்கிய நிலையல், பேருந்துகளில் பயணித்து பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதிய பேருந்து வாங்கவும், மின்சார பேருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும், அமைச்சர் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்