சென்னை துறைமுக மோசடி வழக்கு - 9 பேரை கைது செய்தது சிபிஐ
சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகை பணத்தை, கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர் மதி ராஜா என்பவருடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் வைத்து மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதனை தொடர்ந்து தரகர் மணிமொழி , சென்னை துறைமுக துணை இயக்குனர் என கூறி நடித்த கணேஷ் நடராஜன் மற்றும் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது தற்போது இந்த விவகாரத்தில் 9 குற்றவாளிகளை சிபிஐ கைது செய்துள்ளது