எஸ்.பி. வேலுமணி அரசியல் பயணம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அரசியல் பயணம்.

Update: 2021-08-10 11:16 GMT
மாணவ பருவத்திலேயே அதிமுகவில் இணைந்து பணியாற்றி வரும் 52 வயதாகும் எஸ்.பி. வேலுமணி, 

* குனியமுத்தூர் நகர் மன்றத்தலைவர் பதவியிலிருந்து கட்சியின் உயர்மட்ட பொறுப்புக்களுக்கு உயர்ந்தவர்.

* 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பேரூர் தொகுதியிலும், தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 2021 தேர்தலில் அதே தொகுதியில் 4 வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். 

* 2011 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதிமன்ற துறை 
வழங்கப்பட்டது.  சில காலம் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட அவருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. 

* 2014 ஆம் ஆண்டு கே.பி. முனுசாமி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் வகித்துவந்த உள்ளாட்சி, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளை கூடுதலாக  எஸ்.பி. வேலுமணிக்கு ஜெயலலிதா ஒதுக்கினார். 

* 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் தொண்டாமுத்தூரில் வெற்றிபெற்ற அவருக்கு, உள்ளாட்சி நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையையும் ஜெயலலிதா கூடுதலாக வழங்கினார்.

* ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், இரண்டாக உடைந்த அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பக்கபலமாக நின்றவர், எஸ்.பி.வேலுமணி

* 2021 சட்டப்பேரவை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் வென்றதுடன், கோவை மண்டலத்தில் 15 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றியை தேடி தந்தவர். 

* 2006ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் தன்னுடைய சொத்து மதிப்பு 32 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் என தெரிவித்து இருந்தார். இதுவே 2011 ஆம் ஆண்டு சொத்து மதிப்பு 2 கோடியே 62 லட்சம் என்றும், 2016 தேர்தலில் 4 கோடியே ஒரு லட்சம் என்றும் 2021 தேர்தலில் 5 கோடியே 59 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்