திருப்பூரில் சனி, ஞாயிற்று கிழமைகளில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் வாரத்தின் இறுதி நாட்களில் கடைகள் இயங்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-08-07 07:49 GMT
கொரோனா அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆட்சியர் வினித் அறிவித்துள்ளார். அதன்படி தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும், 5மணிக்கு மேல் அத்யாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி,  சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அத்யாவசிய கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் செயல்பட தடை, உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்,  கேரள எல்லையில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். மேற்கண்ட கட்டுப்பாடுகள் முறையாக செயல்படுகிறதா என்பதை உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்