ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிட்டு போக்குவரத்துத்துறை உத்தரவு
ஓட்டுநர்கள், பணியின் போது கட்டாயம் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட உத்தரவுகளை தமிழக போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது.
ஓட்டுநர்கள், பணியின் போது கட்டாயம் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட உத்தரவுகளை தமிழக போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது.பேருந்தில் பணியில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. பணியின்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தங்கள் உரிமத்தை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வுக்கு காட்டுவதற்காக கையில் வைத்திருக்க வேண்டும், பெயர், பணி எண்ணுடன் கூடிய நேம் பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளது.ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது கட்டாயம் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், நடத்துநரிடம் கொடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த உத்தரவுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களே பொறுப்பாவார்கள் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை எச்சரித்து உள்ளது.