1.5 கோடி மதிப்பிலான குட்கா கடத்தல் - 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீஞ்சூர் அருகே குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு சென்னையின் புறநகர் பகுதிகளில் விநியோகம் செய்யப்படுவதாக, சென்னை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய ஆய்வில், வாகனங்கள் மூலம் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. வாகனங்களில் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜி, கர்ணன், ராஜசேகர், அருள்குமரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் தனிப்படை போலீசார் 4 பேரையும் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்களை கடத்தி வரும் குற்றவாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்