"வீரப்பனுக்கே ஆயுதம் சப்ளை செய்தேன்" - குடிபோதையில் ரகளை செய்த ஆசாமிகள்
வீரப்பனுக்கே ஆயுதம் சப்ளை செய்தோம் என போலீசாரிடம் இரண்டு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தை விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, வடிவேலு மாட்டிக்கொள்ளும் இந்த திரைப்படத்தின் காட்சிகளை போலே நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள மதுக்கடை ஒன்றில், குடிபோதையில் 3 பேர் ரகளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், தலைகால் புரியாமல் குடிபோதையில் அட்டூழியம் செய்தவர்களை காவல்நிலையம் அழைத்து வந்தனர் போலீசார்.வந்துள்ளது காவல்நிலையம் என்றுகூட அறியாமல் சேட்டையை தொடர்ந்த ஆசாமிகள், போதையின் உச்சமாக நாங்கலாம் வீரப்பனுக்கே ஆயுதம் கடத்துனவங்க என போலீசாரிடமே போதையில் உளறினர்.. இதனை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த போலீசார் 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். மறுபக்கம் இவர்களோ நாங்கள் என்ன தவறு செய்தோம் விடுங்க சார், விடுங்க சார் என போதையில் கூறியதையே திரும்ப திரும்ப கூறி வந்தனர்.
ஆம்புலன்ஸ் வந்தது... போதை ஆசாமிகள் வண்டியில் ஏற்றப்பட்டனர். அப்போது மருத்துவ உதவியாளர் பரிசோதனைக்காக அருகில் செல்ல முயன்ற போது, அதுவரை மாஸ்க் போடாத அந்த ஆசாமி, பயத்தில் கொரோனா வந்துவிடும் எனக்கூறி அவசர அவசரமாக மாஸ்க் அணிந்தார்.இருவரையும் கோவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூறிய போலீசார், அவர்களுக்கு போதைய தணிய வைக்கும் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதற்கு உடன்படியாத அந்த நபர், தனக்கு ஏதாவது நேர்ந்தால் வழக்கு தொடர்வேன் என போலீசாரை மிரட்டினார். தன்நிலை மறந்து குடிபோதையில் இருவர் ரகளை செய்த சம்பவம், காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது..