சிபிஎஸ்இ கல்வியாண்டு - 2 பருவங்களாக பிரிப்பு
சிபிஎஸ்இ கல்வியில் இந்த ஆண்டு பருவத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ கல்வியில் இந்த ஆண்டு பருவத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டு 2 பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.2 பருவங்களின் இறுதியிலும் பருவத்தேர்வு நடத்தப்படும் எனக்கூறியுள்ள சிபிஎஸ்இ,முதல் பருவத்தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் பருவத்தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு பருவத்திற்கும் மொத்த பாடத்திட்டத்தில், 50 சதவீத பாடம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைத்து ஜூலை 31-க்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.