கொரோனா மூன்றாவதுஅலையை எதிர்கொள்ளரூ.100 கோடி ஒதுக்கீடு
கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், கொரோனா நிவாரண நிதியாக இதுவரை 353 கோடி ரூபாய் பெறப்பட்டு உள்ளதாகவும்,இந்த நிதி மூலம் ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் கண்டெய்னர்கள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வாங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.தற்போது அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான திரவ ஆக்சிஜன் வாங்குவதற்காகவும்,மூன்றாவது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.