ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி - நுகர் பொருட்கள் விற்பனை 15% உயர்வு

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின், நுகர்வோர் பொருட்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

Update: 2021-06-22 12:55 GMT

ஜூன் 1-15 வரையில் விற்பனை அதிகரிப்பு
மளிகை கடைகளின் செயல்பாடு 28% அதிகரிப்பு


நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின், நுகர்வோர் பொருட்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.  

கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஜூன் ஒன்று முதல் 15 வரையில் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் விற்பனையளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது.  

நாடு முழுவதும் மளிகை கடைகளின் செயல்பாடுகள் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிஸாம் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் உள்ள 75 லட்சம் மளிகை கடைகளின் விற்பனையளவுகளை இந்நிறுவனம் கண்காணித்து வருகிறது.

இனிப்புகள் விற்பனை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வீடுகளை சுத்தப்படுத்தும் பொருட்கள் விற்பனை 12 சதவீதம் மும், 

பாக்கெட் உணவு வகைகளின் விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆனால் குளிர்பானங்கள் விற்பனையளவு மார்ச் மாத அளவை விட 3 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்