திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள் - கே.எஸ்.அழகிரி
வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு மூச்சுவிட நேரம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு மூச்சுவிட நேரம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ஆளுநர் உரை மூலம், தமிழகத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்சி இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகளை குற்றவாளிகளாக கருத வேண்டும் என்றும், திமுகவின் நிலை வேறு, தங்களின் கருத்து வேறு என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.