"2-வது அலை - கர்ப்பிணிகள் அதிக பாதிப்பு"
கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்து உள்ளது.
கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்து உள்ளது.இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2-வது அலையில், இதுவரை 387 கர்ப்பிணிகளுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாகவும்,..அதில் 111 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததாகவும், சதவிகித அடிப்படையில் 28.7% பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது என்றும் கூறப்பட்டு உள்ளது. முதல் அலை காலகட்டத்தில் ஆயிரத்து 143 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும்,..
இவர்களில் 162 பெண்களுக்கு மட்டுமே, அதாவது 14.2 சதவிகித பெண்களுக்கு தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், முதல் அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு சதவிகிதம் 0.7 ஆக இருந்ததாகவும்,இரண்டாவது அலையில் இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளதால், இறப்பு சதவிகிதம் 5.7 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. இரண்டு அலைகளிலும் இதுவரை ஆயிரத்து 530 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டு, 30 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.