மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா - தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தகவல்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், கொரோனா பாதித்த சிங்கங்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், கொரோனா பாதித்த சிங்கங்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.சென்னை அருகே வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஏற்கெனவே 9 சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது மற்றொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த சிங்கத்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.