12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - இணைய வழியில் கருத்துக்களை கேட்க உத்தரவு

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக இணைய வழியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்

Update: 2021-06-02 14:36 GMT
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக இணைய வழியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாளை மாலைக்குள் தயார் நிலையில் அறிக்கையை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர்கள், கருத்துக்களை கேட்டு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நாளை மாலை பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்