பல்கலைக்கழங்களில் பணி நியமன விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டில் பணி நியமனம் பெறுவதற்காக, மதம் மாறிய பணியாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழங்களில் பணி நியமன விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டில் பணி நியமனம் பெறுவதற்காக, மதம் மாறிய பணியாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இன்றி, தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கவுதமன் என்பவரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,உரிய கல்வித்தகுதி இல்லாத கவுதமனின் நியமனமும், பதவி உயர்வும் சட்டவிரோதமானது என நீதிபதி மகாதேவன் தெரிவித்தார்.மேலும், அவரை பணி நியமனம் செய்ய பரிந்துரைத்த தேர்வுக் குழுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி,பல்கலைக் கழகங்கள் பணி நியமனம் செய்யும் போது, வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும்,விண்ணப்பதாரர் யாரேனும் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டால், அதனை உடனடியாக ரத்து செய்வதோடு, அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை தேர்வுக்குழு உறுப்பினர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.மேலும், இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெற, மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட பணியாளரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.