"மரணங்களை தெரிவிப்பது அவமானம் அல்ல" - கொரோனா - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்கள் புள்ளி விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
"மரணங்களை தெரிவிப்பது அவமானம் அல்ல" - கொரோனா - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்கள் புள்ளி விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில், தற்போதைய தடுப்பூசி இருப்பு இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்பதால்,போதுமான தடுப்பூசி மருந்துகளை சப்ளை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுதவிர 3 புள்ளி 5 கோடி டோஸ்கள் கொள்முதலுக்காக சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.தனிமைப்படுத்தல் அறையில் இருந்து எடுக்கும் போதும், அடக்கம் அல்லது தகனம் செய்யும் முன்பும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் முகங்களை காட்ட அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,கொரோனா நிவாரண உதவிகள் வழங்க செல்லும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஏராளமான தொண்டர்கள், தடுப்பு விதிகளை பின்பற்றாமல் செல்வதாகவும் வழக்கறிஞர்கள் குறை கூறினர்.இதைக் கேட்ட நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை தணிந்து வருவதாகவும், மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்தனர்.இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற இலக்கை விரைந்து எட்ட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், card 9 கொரோனா தொற்று எண்ணிக்கை, பலி எண்ணிக்கை விவரங்களை தெரிவிப்பது அவமானமல்ல எனவும், அந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டும் இல்லை எனவும் நீதிபதிகள் தெளிவு படுத்தினர்.பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.