கொரோனாவால் இறந்த முதியவர்... உண்மையை மறைத்து இறுதி ஊர்வலம்
கும்பகோணம் அருகே, உண்மையை மறைத்து கொரோனாவில் இறந்தவருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய மனைவி மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொரோனாவால் இறந்த முதியவர்... உண்மையை மறைத்து இறுதி ஊர்வலம்
கும்பகோணம் அருகே, உண்மையை மறைத்து கொரோனாவில் இறந்தவருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய மனைவி மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது,. இருவரும் தஞ்சாவூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,. இதனைத்தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்த அவரது குடும்பத்தினர் மேள வாத்தியங்களுடன் 12 மணிநேரம் வீட்டில் வைத்து துக்க சடங்குகளை நடத்தியுள்ளனர்,.சாதாரணமாக உடல் நலம் சரியில்லாமல் ராமசாமி உயிரிழந்தார் என உறவினர்களிடம் அப்போது சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது,. இதனால் ஏராளமானோர் திரண்டு வந்து இறந்தவரின் மனைவியிடமும் துக்கம் விசாரித்து சென்றுள்ளனர்,. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ராமசாமியின் மகன் முருகானந்தம் மற்றும் மனைவி பிச்சையம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்,. இதனைத்தொடர்ந்து துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்