முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள்... "உதவிகள் பெற தமிழக அரசு உதவ வேண்டும்" - சீமான் வலியுறுத்தல்
தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள்... "உதவிகள் பெற தமிழக அரசு உதவ வேண்டும்" - சீமான் வலியுறுத்தல்
தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். முகாம்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலான ஈழச்சொந்தங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு, பேரிடர் கால உதவிகளை அரசு செய்யாதிருப்பது ஏமாற்றமளிக்கிறது என அறிக்கையில், கூறியுள்ளார். தமிழக அரசு உடனடியாக முகாம்களின் சுகாதாரத்தை ஆய்வுசெய்து, போதிய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்து, ஈழத்தமிழர்களின் உடல்நலத்தைக் காக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.