"29ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-25 11:08 GMT
வெப்பச்சலனம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 29ஆம் தேதி வரை கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

* வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் 29ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்