அதிமுகவில் இருந்து நிலோபர் கபில் நீக்கம் - ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

முன்னாள் தொழில்துறை அமைச்சரான நிலோபர் கபிலை, கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Update: 2021-05-21 16:48 GMT
அதிமுகவில் இருந்து நிலோபர் கபில் நீக்கம் - ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

முன்னாள் தொழில்துறை அமைச்சரான நிலோபர் கபிலை, கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிவித்துள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியில் வெற்றி பெற்று, அமைச்சராக இருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதற்கு, முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி உடனான மோதல் போக்கே காரணம் என கூறப்பட்டது. நிலோபர் கபிலும் வீரமணி மீது குற்றஞ்சாட்டினார்.  இந்த நிலையில், நிலோபர் கபிலை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர், திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளர் உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். 
 
Tags:    

மேலும் செய்திகள்