தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - அரசாணை வெளியீடு!
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அரசு சார்பில் பரிந்துரைக்கப்படும் தனியார் ஆய்வகத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளக்கூடிய பரிசோதனைகளுக்கான கட்டணம் 800 ரூபாயிலிருந்து 550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் குழு பரிசோதனை கட்டணம் 600 லிருந்து 400 ரூபாயாகவும் ,
* முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் இல்லாதவர்களுக்கான தனியார் ஆய்வக பரிசோதனை கட்டணம் 1200 லிருந்து 900 ஆக விலை குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்யும் பட்சத்தில் கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.