800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 800 படுக்கை வசதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 800 படுக்கை வசதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பரவலை, தடுத்திட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு அங்கமாக, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன், 800 படுக்கைகளும், சாதாரண படுக்கைகள் அறுபத்தி நான்கும், அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது படுக்கை வசதி குறித்தும் படுக்கைகளுக்கு வழங்கப்பட உள்ள ஆக்சிஜன் வசதி குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டார். இந்த கொரோனா சிகிச்சை மையம் விரைந்து திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகளை, உடனடியாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே. என். நேரு, தா.மோ. அன்பரசன், அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
==