7 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்​கை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வருகிற 25ஆம் தேதி, மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே, புயலானது கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-11-22 11:08 GMT
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 24ஆம் தேதி மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை  ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும், வருகிற 25ஆம் தேதி, புயலானது மாமல்லபுரம், காரைக்கால் இடை​யே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்