விக்கிரகங்களை கொண்டு செல்லும் பாரம்பரிய முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்கள் போராட்டம்

நவராத்திரி விழாவுக்காக கொண்டு செல்லப்படும் விக்கிரகங்களின் பாரம்பரிய நடைமுறையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்கள் கல்குளத்தில் போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-10-10 04:30 GMT
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி  பூஜையில் வைப்பதற்காக, பத்மநாபபுரம் தேவார கட்டு  சரஸ்வதி, குமாரகோவில் முருகன் ,சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய மூன்று விக்ரகங்களும் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பண்டைய திருவிதாங்கூர் மன்னரின் உடைவாளும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பவனியாக நடந்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.  தமிழக கேரள மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இரு மாநில மக்களும் ஒன்றிணைந்து இந்த விழா காலம் காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலால், விக்ரகங்களை பவனியாக கொண்டு செல்லாமல் வாகனங்களில் பத்மநாபபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ஏற்றிச் செல்ல கேரள அரசு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 
பாரம்பரிய முறையில்  பத்மநாபபுரம் முதல் திருவனந்தபுரம் வரை விக்ரகங்களை பவனியாக நடந்து கொண்டு செல்ல அனுமதிக்க கோரி, இந்து இயக்கங்கள் சார்பில் கல்குளம் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தால், பத்மநாபபுரம் - தக்கலை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்