அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமீன் கோரி மனு - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவு

சிலை கடத்தல் வழக்கில் கைதான அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமீன் கோரிய வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-29 08:57 GMT
இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான சிலைகளை கடத்தி, அதை வெளிநாடுகளில் சுபாஷ் சந்திர கபூர் விற்பனை செய்து வந்தார். இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் எட்டு ஆண்டுகளாக சிறையில் உள்ள சுபாஷ் சந்திர கபூர், ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கைதான 14 பேரில், தன்னை தவிர அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதை மனுவில் அந்த நபர் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், அக்டோபர் 7ஆம் தேதிக்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை தள்ளி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்