வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்துக் கொலை - காவல் நிலைய ஆய்வாளர் மீது கொலை வழக்கு

வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2020-09-18 06:04 GMT
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனிஷ்லாஸ் என்பவரின் மகன் செல்வன். இவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் செல்வனுக்கும், சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று பிற்பகல் செல்வன் இருசக்கர வாகனத்தில் சாத்தான்குளத்தில் இருந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். தட்டார்மடம் அருகே கொழுந்தட்டு நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட செல்வன்,  அந்த காரில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் கீழே இறங்கியதை கண்டு ஓடினார். அவரை விரட்டி சென்று தாக்கிய அந்த கும்பல், காரில் கடத்தி சென்றது. காருக்குள் இருந்தபடியே செல்வனை தாக்கியதால் பலத்த காயம் அடைந்த செல்வன் உயிரிழந்தார். உடலை வீசிச் சென்றது குறித்து அறிந்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் மீது கொலை வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர். இதனை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்