ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்- நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி விமர்சனம்
ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கு அந்த தொகுதி எம்.பி.நவாஸ்கனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கு அந்த தொகுதி எம்.பி.நவாஸ்கனி கண்டனம் தெரிவித்துள்ளார். இரு குழுக்கள் இடையே நடைபெற இருந்த மோதலை தடுத்து, அமைதியை ஏற்படுத்தி நேர்மையுடன் செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு கொடுத்த பரிசா எனக் கேள்வி எழுப்பிய அவர், இது துணிச்சலுடன், நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் மீதான அச்சுறுத்தல் என விமர்சித்துள்ளனர்.