பிரேமலதா கருத்து : கூட்டணியில் பிளவா? - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில்
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால், கூட்டணியில் பிளவு என்றோ, அ.தி.மு.க பலவீனமானது என்றோ கருத முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால், கூட்டணியில் பிளவு என்றோ, அ.தி.மு.க பலவீனமானது என்றோ கருத முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.